சத்து மாத்திரை சாப்பிட்ட 30 மாணவ, மாணவிகள் மயக்கம்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பாலி புதுக்காலனி கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆசனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் செவிலியர்கள் நேற்று சத்து மாத்திரை வழங்கி உள்ளனர். இதனை சாப்பிட்ட 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென வயிற்று வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக பெற்றோர் பள்ளிக்கு சென்று தங்களது பிள்ளைகளை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதனிடையே மருத்துவர்கள் மற்றும் சுகாதார குழுவினர் இந்த சத்து மாத்திரையால் ஏதும் அசம்பாவிதம் நிகழாது. பயப்பட தேவையில்லை என கூறி போதிய சிகிச்சை அளித்தனர்.

Related Stories: