வெ.இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் வங்கதேசம் 234 ரன்னில் ஆல்அவுட்

செயின்ட் லூசியா: வெஸ்ட்இண்டீஸ்-வங்கதேசம் இடையே 2 டெஸ்ட் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட்டில் வெ.இண்டீஸ் வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 64.2 ஓவரில் 234 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 53, தமீம் இக்பால் 46 ரன் எடுத்தனர்.

வெஸ்ட்இண்டீஸ் பந்துவீச்சில் அல்சரி ஜோசப், ஜெய்டன் சீல்ஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம்இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் நேற்றைய ஆட்டநேர முடிவில் 16 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 67 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கிரேக் பிராத்வைட் 30, ஜான் காம்ப்பெல் 32 ரன்னில் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: