நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பேர்ஸ்டோ சதத்தால் மீண்ட இங்கிலாந்து

லீட்ஸ்: இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல்நாள் முடிவில் 5 விக்கெட்இழப்பிற்கு 225 ரன் எடுத்திருந்தது. 2வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 117.3 ஓவரில் 329 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. டேரில் மிட்செல் 109 ரன் அடித்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜாக் லீச் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம்இறங்கிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் லீஸ் 4, சாக் கிராலி 6, ஒல்லி போப், ஜோ ரூட் தலா 5, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 18, பென் போக்ஸ் 0 என ஆட்டம் இழந்தனர். 55 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில் ஜானி பேர்ஸ்டோ-ஜேமி ஓவர்டன் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். நேற்றைய ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 264 ரன் எடுத்திருந்தது. காட்டடி அடித்து சதம் விளாசிய பேர்ஸ்டோ 130, ஓவர்டன் 89 ரன்னில் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: