மாணவிகளுக்கு ஆலோசனை

திருத்தணி: திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினர் கலை கல்லூரியில், நாட்டு நலப்பணி திட்டம், மகளிர் குழு மற்றும் பீரகுப்பம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து மாணவிகளின் உடல்நலம் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இதற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார்.

பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் தனஞ்செயன், சத்ரஞ்செயபுரம் துணை சுகாதார செவிலியர் ஆனந்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவிகள் எவ்வாறு உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறினர். இதைத்தொடர்ந்து மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி நாப்கின் வழங்கினார். இதில், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் ரமேஷ், பாலாஜி, மகளிர் குழு உறுப்பினர்கள் நிர்மலா, அம்மு, உடற்கல்வி பயிற்றுநர் அனந்தநாயகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: