துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் அண்ணாநகர் பகுதியில் போதை விழிப்புணர்வு

அண்ணாநகர்: அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரம் வழங்கி போலீசார், போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி, சர்வதேச போதை பொருட்கள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அண்ணாநகர் பகுதியில் உள்ள கல்லூரி, அரசு பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

அண்ணாநகர் டவர் பூங்கா, தியேட்டர், மால் ஆகிய பகுதிகளில் அண்ணாநகர் போலீஸ் துணை ஆணையர் விஜயகுமார், உதவி ஆணையர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் கோபாலகுரு ஆகியோர் தலைமையில், போலீசார் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை கொடுத்து போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தனர். வாகனங்களில் துண்டுபிரசுரங்களை  ஒட்டி வாகன ஓட்டிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: