கள்ளத் தொடர்பு விவகாரம் வாலிபருக்கு சரமாரி வெட்டு: கூலி தொழிலாளி கைது

அண்ணாநகர்: கள்ளத் தொடர்பு விவகாரத்தில் வாலிபரை சரமாரியாக வெட்டிய கூலி தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை டி.பி.சத்திரம் 26வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மகேஷ்(25). இவர் ஏசி மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர் தீபன்(22). இவர் கூலி தொழிலாளி. இந்த நிலையில், மகேஷ் மனைவிக்கும் தீபனுக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தெரியவந்ததும் மகேஷ், தீபனிடம் சென்று ‘’என் மனைவியிடம் பேசுவதை விட்டுவிடு இல்லாவிட்டால் பிரச்னை ஏற்படும்’ என்று எச்சரித்துள்ளார். இருப்பினும் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார்.

இதுசம்பந்தமாக சத்திரம் காவல் நிலையத்தில் மகேஷ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குபதிவு செய்து தீபனை காவல்நிலையத்துக்கு அழைத்து விசாரித்துள்ளனர். அப்போது அவரிடம் போலீசார், ‘ நீ மகேஷ் மனைவியிடம் இனிமேல் பேசக்கூடாது, அப்படி செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தீபனை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து அவர் தனது வீட்டை காலிசெய்துவிட்டு வில்லிவாக்கம் பகுதியில் குடியேறிவிட்டார். ஆனால் ஏசி மெக்கானிக் கடை டி.பி. சத்திரம் பகுதியில் இருந்ததால் மகேஷ் தினமும் கடைக்கு சென்றுவிட்டு செல்வது இருந்தது.

இந்த நிலையில், நேற்று மகேஷ் கடையில் வேலை செய்துகொண்டு இருந்தபோது குடிபோதையில் வந்த தீபன், மகேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி இருவரும் சரமாரி தாக்கிக்கொண்டனர். கோபம் அடைந்த தீபன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வெட்டுவதற்கு முயன்றபோது தடுத்த மகேஷ் கையில் வெட்டு விழுந்தது. இதனால்  அங்கிருந்து தீபன் தப்பி சென்றுவிட்டார். அப்பகுதியினர் மகேஷை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி மகேஷ் கொடுத்த புகாரின்படி, டிபி சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து தீபனை கைது செய்தனர். பின்னர் அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: