புழல், செங்குன்றத்தில் பலத்த சூறைக்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்தன

புழல்: புழல், செங்குன்றம், சோழவரம் பகுதிகளில் நேற்றிரவு பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் பல்வேறு மின்கம்பங்கள் உடைந்து, வீடுகளின் மதில்சுவரில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் மின்தடை நிலவி வருகிறது. சென்னை புழல், செங்குன்றம், சோழவரம் உள்பட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் புழல் பகுதியில் சூறைக்காற்று வீசியதில், கன்னடப்பாளையம், திருவிக தெருவில் சேதமடைந்த மின்கம்பம் இரண்டாக உடைந்து, அங்குள்ள வீட்டின் மதில் சுவரில் விழுந்ததில் சேதமானது.

இதேபோல் சோழவரம், செங்குன்றம் பகுதிகளிலும் சேதமான மின்கம்பங்கள் உடைந்து விழுந்தன. இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும், மேற்கண்ட பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதிகளில் மின்தடை நீடித்து வருகிறது.

எனவே, மேற்கண்ட பகுதிகளில் சேதமான மின்கம்பங்களை அகற்றி சீரமைக்கவும், அப்பகுதிகளில் சீரான மின் வினியோகத்தை கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: