மாமியாரை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது

தண்டையார்பேட்டை: சென்னை காசிமேடு, ஜி.எம்.பேட்டை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் பரிமளா (45). அதே பகுதியை சேர்ந்தவர் மதன்குமார் (எ) ஈறுபேன் மதன் (26). பரிமளாவின் மகளை மதன்குமார் திருமணம் செய்து கொண்டு, இந்த வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். நேற்றிரவு குடிபோதையில் வீடு திரும்பிய மதன்குமார் மனைவியுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டு சரமாரி அடித்துள்ளார்.

இதை தடுக்க வந்த மாமியார் பரிமளாவை பீர்பாட்டிலால் மதன்குமார் சரமாரி தாக்கியுள்ளார். இதில் பரிமளாவுக்கு கன்னம், வலது கண்புருவம் மற்றும் முதுகு பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இப்புகாரின்பேரில் காசிமேடு இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியில் பதுங்கியிருந்த மதன்குமாரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: