கடையம் அருகே கூண்டை உடைத்து 40 கோழிகளை வேட்டையாடிய கரடி

கடையம் : கடையம் அருகே கோழிப்பண்ணையில் கூண்டை உடைத்து 40 கோழிகளை கரடி கொன்றது.தென்காசி மாவட்டம் கடையம் அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் பண்ணை வைத்து நாட்டுக் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்த கரடி கோழிப் பண்ணையில் இரும்பு கம்பி வலையை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது. அங்கிருந்த 40 கோழிகளை கடித்து கொன்று தின்றது.

இதுகுறித்து தகவலறிந்த கடையம் வனச்சரக உதவி வனப்பாதுகாவலர் ராதை உத்தரவின்படி வனக்காப்பாளர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

தொடர்ந்து வனத்துறை சார்பில் இறந்த கோழிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கரடிகள் ஊருக்குள் புகாமல் தடுக்க இரவு, பகல் நேரத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் இதே பகுதியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தை மேய்ச்சலில் இருந்த சினை ஆட்டை அடித்து கொன்று மரத்தில் தொங்கவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: