ஆற்காடு அருகே திடீர் சோதனை புகையிலைப் பொருட்கள் விற்ற 13 கடைகளுக்கு அபராதம்-சுகாதாரத்துறையினர் அதிரடி

ஆற்காடு : ஆற்காடு அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 13 கடைகளுக்கு நேற்று சுகாதாரத்துறையினர் அதிரடி அபராதம் விதித்து வசூலித்தனர்.

ஆற்காடு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சத்யநாராயணன், நீலவண்ணன், நிசாந்த், ஜெயக்குமார், சீனிவாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆற்காடு கலவை ரோடு கஸ்பா  ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது பொது இடங்களில் புகை பிடித்த, புகை பிடிக்க அனுமதித்த மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற வியாபாரிகள் உட்பட 13 பேருக்கு தலா ₹100 அபராதம் விதித்து வசூலித்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்க கூடாது. புகைபிடிக்க தடை செய்யப்பட்ட இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

Related Stories: