கூத்தம்பூண்டி வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பருத்தி ஏலம்

திருச்செங்கோடு :திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகம், திருச்செங்கோடு-வேலூர் சாலையில் உள்ளது. மல்லசமுத்திரம், கொங்கணாபுரம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. தற்போது புதிதாக மாணிக்கம்பாளையம் அருகேயுள்ள கூத்தம்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பருத்தி ஏலம் துவங்கப்பட்டுள்ளது. பருத்தி ரகங்களை முசிறி, புதுப்பட்டி, வடக்கு நல்லியம்பட்டி, தெற்கு நல்லியம்பட்டி, தண்டலை, திருத்தலையூர், சேங்கணம், ராசிபுரம், கதிராநல்லூர், புதுச்சத்திரம், துறையூர், அம்மம்பாளையம், மருவத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து விவசாயிகள் கொண்டு வரும் வாய்ப்புள்ளது.  இதற்கான துவக்க விழாவிற்கான பூமி பூஜையில், தலைவர் திருமூர்த்தி, மேலாண் இயக்குனர் விஜயசக்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பிரதி வியாழக்கிழமை தோறும், பருத்தி டெண்டர் விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

23. இடிந்து கிடக்கும் தரை பாலத்தை

சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சின்னாளபட்டி, ஜூன் 25: சின்னாளபட்டி 6வது வார்டில் இடிந்து கிடக்கும் தரை பாலத்தை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட6வது வார்டில் வெங்கட்ராமன் தெரு, பொம்மைய சுவாமி கோவில் மெயின் தெரு, சிகாமணி ஆசிரியர் தெரு,குணசீலன் ஆசிரியர் தெரு, பி.ஆர்.ஆர். தெரு உட்பட 20க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.

இதில் பி.ஆர்.ஆர்.கே.தெருவில் உள்ள வடிகாலில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தரைப்பாலப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டதால் சாலையில் ஓடியதோடு வீடுகளுக்குள் புகுந்தது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வார்டு உறுப்பினர் செல்வக்குமாரி தரைப்பாலத்தை உடைத்து அடைப்புகளை அகற்றிய பின்பு மழைநீர் தேங்காமல் ஓடியது.பின்பு உடைந்து கிடக்கும் தரைப்பாலத்தை சீரமைக்க கடந்த 2 மாதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் இருசக்கர வாகனத்தில் வருவோர் தடுமாறி தரைப்பாலம் அடியில் உள்ள வடிகாலில் விழுந்து விடுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டுமென்று பி.ஆர்.ஆர்.கே. தெரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: