காவல்நிலையம், கடற்கரையில் விழிப்புணர்வு பேனர், செல்பி பாயிண்ட்

புதுச்சேரி :  சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரி காவல்துறை மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் மாணவர்கள் பங்கேற்ற 5 கி.மீ ஓட்டத்தை கவர்னர் தமிழிசை துவக்கி வைத்தார். மேலும், அங்கு கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு திரையில் கையெழுத்திட்டார். நேற்று காலை சைக்கிள் பேரணியை முதல்வர் தொடங்கி வைத்தார். இதேபோல், ஒரு வாரத்துக்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி புதுச்சேரி ஒதியஞ்சாலை காவல்நிலையம் முன் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் நிலையம், கடற்கரை சாலை, பாண்டி மெரினா, பெரியகடை காவல்நிலையம் ஆகியவை முன்பும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது. `வாழ்க்கை வாழ்வதற்கே... போதை பொருட்களை மறுப்போம்... நான் உறுதி ஏற்கிறேன்’ உள்ளிட்ட வாசகங்கள் செல்பி பாயிண்ட் பேனரில் இடம் பெற்றுள்ளது. கடற்கரை சாலை, பாண்டி மெரினா உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் முன் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் நின்று செல்பி எடுத்துக் கொண்டனர். அதேபோல், கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு திரையிலும் கையெழுத்திட்டனர்.

Related Stories: