சன்னமல்லி விளைச்சல் அதிகரிப்பு

சேலம் : சேலம் மாவட்டத்தில் குண்டுமல்லி, சன்னமல்லி, கனகாம்பரம், அரளி, சாமந்தி, சம்பங்கி உள்பட பல ரக பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. சேலத்தில் பறிக்கப்படும் பூக்கள், சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட்டுக்கும், இதைதவிர பெங்களூர், சென்னை, கோவை உள்பட பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால், சன்னமல்லி விளைச்சலுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக சன்னமல்லி விளைச்சல் அதிகரித்துள்ளது.

Related Stories: