வேலூர் சத்துவாச்சாரியில் ஆலோசனை பொது இடங்களில் குப்பைகளை எரிக்கக்கூடாது-தூய்மை பணியாளர்களுக்கு கமிஷனர் உத்தரவு

வேலூர் :  வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் பொது இடங்களில் குப்பைகளை எரிக்கக்கூடாது என்று கமிஷனர் அசோக்குமார் உத்தரவிட்டார்.வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்துக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று காலை சத்துவாச்சாரி பொது சுகாதார கோட்ட அலுவலகத்தில் நடந்தது. கமிஷனர் அசோக்குமார் தலைமை தாங்கினார். நகர்நல அலுவலர் மணிவண்ணன் வரவேற்றார்.

அப்போது கமிஷனர் பேசுகையில், ‘வீடுகள் தோறும் சென்று சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும். தரம் பிரித்து வாங்கப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டி எரிக்கக்கூடாது.

ஒவ்வொரு பகுதிக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் தங்கள் பகுதியை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கழிவுநீர் கால்வாய் அடைப்பு போன்றவை உடனடியாக சரி செய்ய வேண்டும். பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் பணியாற்ற வேண்டும்’ என்றார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் தூய்மை பணிகளை பார்வையிட்டார்.

Related Stories: