திண்டுக்கல்லில் பன்னீர் ரோஜா விலை கடும் சரிவு: விவசாயிகள் வேதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு மலை சந்தையில் பன்னீர் ரோஜாவின் விலை கடுமையாக சரிவடைந்திருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் அம்மைநாயக்கனுர், பள்ளப்பட்டி, சிலுக்குவார்பட்டி, கொடைரோடு, உள்பட பல கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்களை கொடைரோடு மலை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவர். ஆனால் தற்போது விழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள் குறைவாக இருப்பதால் பன்னீர் ரோஜா விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பன்னீர் ரோஜா சாகுபடி செய்த விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே தமிழக அரசு உடனடியாக இந்த பகுதியில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: