வார விடுமுறையை ஒட்டி திருப்பதி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருப்பதி: தி ஏழுமலையான் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிக்கிறது. திருப்பதி கோயில் வைகுண்டம் காத்திருப்பறைகளில் 32 அறைகளும் நிரம்பிய நிலையில் ஆஸ்தான மண்டபம் வரை பக்தர்கள் 3 கி.மீ.க்கு நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமும் 300 ரூபாய் சிறப்பு விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வாராந்திர விடுமுறை கூட்டத்தை கருத்தில் கொண்டு வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் ஏற்கெனவே விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில் சிபாரிசு கடிதங்கள் பெயரில் எந்த தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.

தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு அவ்வப்போது பால், குடிநீர் மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக திருமலையில் உள்ள பேருந்து நிலையங்களும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. இதனிடையே வெள்ளிக்கிழமை காலை முதல் இரவு வரை 71,589 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் சாமி தரிசனத்திற்கு பிறகு நேற்று ஒரே நாளில் 4 அரை கோடி ரூபாய் செலுத்தினர். இதேபோல மொத்தம் 41,240 பக்தர்கள் மொட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தினர்.     

Related Stories: