பயணிகள் நிழல் பந்தல் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய அவலம்

சேத்தியாத்தோப்பு :  சேத்தியாத்தோப்பு பேரூராட்சி சார்பில் பயணிகளின் நலன்கருதி வெயிலின் தாக்கத்தால் பாதிக்காதவாறு கீற்று பந்தல் அமைக்கப்பட்ட இடத்தில் பயணி நிற்காதவாறு சமூக விரோதிகள் இருசக்கர வாகனங்களை நிறுத்திவைப் பதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். சேத்தியாத்தோப்பு ராஜீவ்காந்தி சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் வெயிலின் தாக்கத்தால் பயணிகள் அவதியடைந்து வருவதை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பேரூராட்சி மன்ற தலைவர் தங்க. குலோத்துங்கன் மற்றும் செயல் அலுவலர் ஜெயராமன் உத்தரவின் பேரில் கீற்று பந்தல் அமைக்கப்பட்டது. இதனால் பயணிகள் வெயிலின் தாக்கத்தில் சிக்காமல் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் சிலர் இருசக்கர வாகனத்தை கீற்று பந்தலின் கீழ் நிறுத்தி பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: