மத்தூரில் தொடர் மழையால் சேறும், சகதியுமாக மாறிய சாலை

போச்சம்பள்ளி : திருவண்ணாமலையிலிருந்து கிருஷ்ணகிரிக்கு மத்தூர் வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. மத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி-பர்கூருக்கு செல்லும் மெயின் சாலை பல வருடங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் முக்கிய பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், அவ்வழியாக டூவிலர்களில் செல்வோர் விபத்தில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது. குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: