கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டது அமெரிக்காவுக்கு மோசமான நாள்: ஜோ பைடன் கருத்து..!

வாஷிங்டன்: அமெரிக்காவில் 50 ஆண்டுகால கருக்கலைப்பு உரிமை சட்டத்தை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் 13 மாகாணங்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை இயற்றியுள்ளன. கருக்கலைப்பு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்று 1973ம் ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கருக்கலைப்பு உரிமை சட்டம் ரத்து செய்யப்பட்டது அமெரிக்காவுக்கு மோசமான நாள் என அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளார்.

கருக்கலைப்பு உரிமை சட்டத்தை ரத்த்து செய்ததன் மூலம் பெண்களின் அடிப்படை உரிமையை உச்சநீதிமன்றம் பறிக்கிறது. பெண்களின் அடிப்படை உரிமையை பறித்து அமெரிக்க உச்சநீதிமன்றம் வரலாற்று பிழையை இழைத்து விட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராடுபவர்கள் வன்முறையில் ஈடுபடக்கூடாது எனவும் அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: