காசு, பணம், துட்டு, மணி, மணி...

காசு...

ஜெயலலிதா ஆட்சியின்போது அமைச்சர்கள் கொள்ளையடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ெஜயலலிதா வரை புகார் சென்றது. இதனால் 2011ம் ஆண்டு தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக அமைச்சர்கள் பலரை ஓட்டலில் பல நாட்களாக தங்க வைத்து, பலரின் சொத்துக்களை எழுதி வாங்கிவிட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக வெளிநாட்டில் செய்யப்பட்ட முதலீட்டு ஆவணங்களை பறிமுதல் செய்து விட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் அதிமுக வெற்றி பெற்ற பிறகு ஜெயலலிதா மரணம் அடைந்த உடன் அமைச்சர்கள் தங்கள் இஷ்டத்துக்கு புகுந்து விளையாடி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பணம்...

சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கியவுடன் 11 எம்எல்ஏக்கள் அவருக்கு ஆதரவு அளித்தனர். இதனால் அதிமுக அரசு கவிழும் நிலை ஏற்பட்டது. இதனால் எம்எல்ஏக்களை தக்க வைப்பதற்காக கூவத்தூருக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர்.

அங்கு எம்எல்ஏக்களுக்கு 3 ஸ்வீட் பாக்ஸ்கள் சப்ளை செய்யப்பட்டதாக சில எம்எல்ஏக்களே தெரிவித்தனர். அங்கு அவர்களுக்கு மதுவும் சப்ளை செய்யப்பட்டு ஜாலியாக இருந்தனர். அதோடு நிற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி முதல்வரானதும், எம்எல்ஏக்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

துட்டு...

தேர்தல் நேரத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு 12 ஸ்வீட் பாக்ஸ்கள் வரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்டச் செயலாளர்களும் பெரிய அளவில் கவனிப்புகள் நடந்தன. இதனால் தேர்தல் நேரத்தில் அதிமுகவில் செழிப்பாக இருந்தனர். வாக்காளர்களுக்கும் பணத்தை வாரி இறைத்தனர். ஏன் தேர்தல் நேரத்தில்தான் டாஸ்மாக் விற்பனை அதிகமாக இருந்தது. நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளில் விற்பனை களை கட்டியது. அந்த அளவுக்கு பணம் புழக்கம் இருந்தது.

மணி, மணி...

அதிமுகவில் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் கட்சியை கைப்பற்றுவதற்காக திட்டமிட்ட எடப்பாடி பழனிசாமி அணி, பணத்தை வாரி இறைத்தது. 750 ஸ்வீட் பாக்ஸ்கள் வரை இறைக்கப்பட்டது. ஆனாலும் 12 மாவட்டச் செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தனர். அவர்களுக்கு 5 ஸ்வீட் பாக்ஸ்கள் வழங்கப்பட்டன. இதனால் உடனடியாக அவர்கள் எடப்பாடி அணிக்கு தாவி விட்டனர். கடைசியாக 5 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் உள்ளனர்.

மேலும், சென்னையில் பொதுக்குழு, செயற்குழு கூடுவதால், அவர்கள் சென்னை வந்து தங்குவதற்கும், சாப்பாடு உள்ளிட்ட செலவுகளுக்காகவம் தனியாக லட்டுகள் வழங்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்களை கூட்டி வருவதற்காக ஒன்றிய மற்றும் நகரத்தில் பகுதி, வட்டச் செயலாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டன.

மேலும் தொண்டர்களை அழைத்து வர அதற்கும் தனியாக பணம் இறைக்கப்பட்டது. இவ்வாறு அதிமுகவில் எந்த பிரச்னை என்றாலும் பணத்தை தண்ணீராக வாரி இறைத்து செலவு செய்து வருவது தொண்டர்களை குஷிப்படுத்தி வருகிறது என்கின்றனர் அதிமுகவினர். ஆனால் இவர்கள் அடிக்கும் கூத்தைப் பார்த்து பொதுமக்கள், தாங்கள் கட்டிய வரி பணத்ைத எல்லாம் அவர்கள் இந்த கொண்டாட்டங்களுக்கும், மோதல்களுக்கும் பயன்படுத்துகிறார்களே என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories: