சசிகலா நாளை சுற்றுப்பயணம்

சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் நிலவி வரும் நிலையில் சசிகலா நாளை திருத்தணியில் ஆதரவாளர்களை சந்திக்கிறார். 26ம் தேதி மதியம் 12.30 மணிக்கு தி.நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பயணத்தை தொடங்கி திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார்.

குண்டலூரில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர், கோரமங்கலம், கே.ஜி.கண்டிகை, எஸ்.வி.ஜி.புரம், கிருஷ்ணாகுப்பம், ஆர்.கே.பேட்டை ஆகிய இடங்களில் தொண்டர்களைசந்திக்கிறார். பின்னர், அம்மையார்குப்பம் செல்கிறார். இதையடுத்து தி.நகர் இல்லம் வந்தடைகிறார். தொண்டர்கள், நிர்வாகிகள் இதில் கலந்து கொள்ளவேண்டும் என சசிகலா அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: