படப்பிடிப்பின்போது மாரடைப்பு: மலையாள நடிகர் காலித் மரணம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் காலித் (74). நாடக நடிகரான இவர் 1973ல் பெரியார் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார். தாப்பானா, அனுராக கரிக்கின் வெள்ளம் உட்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக இவர் டிவி தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் ஜூட் ஆண்டனியின் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் நடைபெற்று வந்தது. நேற்று காலித் வழக்கம்போல படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படப்பிடிப்பின் இடையே கழிப்பறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது காலித் கழிப்பறைக்குள் மயங்கிய நிலையில் கிடந்தார். உடனடியாக அவரை கொச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். மாரடைப்பு தான் மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறினர். மலையாள சினிமாவில் பிரபல டைரக்டரான காலித் ரகுமான் மற்றும் ஒளிப்பதிவாளர்களான ஷைஜு காலித் மற்றும் ஜிம்ஷி காலித் ஆகியோர் இவரது மகன்கள் ஆவர்.

Related Stories: