ரஷ்யாவின் சரக்கு விமானம் விபத்து: 4 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்யா ராணுவத்தின் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். ரஷ்ய ராணுவத்துக்கு சொந்தமான ஹெவிலிப்ட்-76 சரக்கு விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. ரியாசன் நகருக்கு வெளியே வயல்வெளியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் விமானம் விழுந்து நொறுங்கியதாக தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெவிலிப்ட் -76 விமானம் கடந்த 1970ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. சோவியத் ம்றறும் ரஷ்யாவின் விமானப்படையில் முக்கிய பங்காற்றியுள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகள் இந்த சரக்கு விமானத்தை பயன்படுத்தி வருகின்றன.

Related Stories: