×

உறுதியான ஊக்கமருந்து சோதனை: இந்திய ரக்பி வீராங்கனைக்கு தடை

புது டெல்லி: தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தியது, சோதனையில் உறுதியானதால் இந்திய ரக்பி  வீராங்னைக்கு 2ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய  ரக்பி வீராங்கனை  அந்திமா ராணி. பீகாரைச் சேர்ந்தவர். சீனாவின் ஹாங்சூ  நகரில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தேர்வு  செய்யப்பட்ட ரக்பி அணியில் அந்திமாவும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் அவர் தடை செய்யப்பட்ட ‘டாமோக்சிஃபென்’ என்ற ஊக்க மருந்தை பயன்படுத்தியது உறுதியானதால், அந்திமா ராணி 2 ஆண்டுகளுக்கு சர்வதேச, உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற தேசிய  ஊக்கமருந்து தடுப்பு முகமை(என்ஏடிஏ-நாடா) தடை  நேற்று விதித்துள்ளது.

இப்படி ஊக்க மருந்து பயன்படுத்தியதால் தடைக்கு ஆளான முதல் இந்திய ரக்பி வீராங்கனை  அந்திமாதான் என்பது குறிப்பிடத்தக்கது. புவனேஸ்வரத்தில்   2021ம் ண்டு அக்டோபர் 18ம் தேதி நடந்த  ரக்பி அணிக்கான தேசிய   முகாமில் தான் அந்திமாவின்  சிறுநீர் மாதிரி சேகரிக்கப்பட்டது. அதன் சோதனை  முடிவுகள் இப்போதுதான் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் அவர் பல்வேறு போட்டிகளில் விளையாடி, ஆசிய  விளையாட்டுப் போட்டிக்கும் தேர்வாகி விட்டார். ஒருவேளை இன்னும்  தாமதமாகி  இருந்தால்  சீனாவில் நடைபெற இருந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று  இருப்பார்.

அதன் பிறகு நாடா முடிவுகள் வெளியாகி இருந்தால் நாட்டுக்கும் சங்கடம்தான். நல்லவேளை ஆசிய விளையாட்டுப் போட்டி இப்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாடா நிர்வாகி ஒருவர் , ‘வீரர், வீராங்னைகளிடம் சேகரிக்கும் சிறுநீர் மாதிரிகளில் பி-மாதிரி இந்தியாவிலேயே சோதனை செய்யப்படும். ஏ-மாதிரி பெல்ஜியத்தில் உள்ள  உலக ஊக்கமருத்து தடுப்பு முகமை(டபிள்யூஏடிஏ-வாடா) ஆய்வகத்துக்கு அனுப்பி  வைக்கப்படும்.

அங்கிருந்துதான் முடிவுகள் தர தாமதமாகின்றன. மற்றபடி நாடா சோதனை முடிவின் அடிப்படையில்  டிசம்பர் 30ம் தேதியே அவர் தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டார். அதனால் 2 ஆண்டுகள் தடை என்பது ஏற்கனவே தொடங்கி விட்டது’ என்றார். ஆனால் இதுப்போன்ற ஊக்கமருந்து சோதனைகளில் சிக்கும் வீரர், வீராங்ககைள் பெரும்பாலும் எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களாவே  இருக்கின்றனர்.


Tags : Strong doping test: Indian rugby player banned
× RELATED சென்னையில் ஐ.பி.எல். போட்டி; ஏப்.25ல் டிக்கெட் விற்பனை..!!