ரூ25 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருமலை: திருப்பதி அருகே மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ25 லட்சம் மதிப்புள்ள 29 செம்மரக்கட்டைகளை அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர்.திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் புலிபோனு, அன்னதம்முலா பண்டா, பொம்மாஜி மலை ஆகிய பகுதிகளில் அதிரடிப்படையினர் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புலிபோனு அருகே குண்டலகோணா என்ற இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 11 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து தொடர்ந்து நடந்த சோதனையில், அன்னதம்முலா பண்டாவில் 12 செம்மரக்கட்டைகள், பொம்மாஜிமலையில் 6 செம்மரக் கட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகள் 598 கிலோ எடையுள்ளது இதன் மதிப்பு ரூ.25 லட்சம். தப்பி ஓடிவிட்ட கடத்தல்காரர்களை தேடி வருவதாக திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை எஸ்.பி. சுந்தர்ராவ் தெரிவித்தார்.

Related Stories: