சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 160 அதிகரித்தது.தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 20ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 10 அதிகரித்து ஒரு கிராம் 4,775க்கும், சவரனுக்கு 80 அதிகரித்து ஒரு சவரன் 38,200க்கு விற்கப்பட்டது. 21ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் 4,765க்கும், சவரனுக்கு 80 குறைந்து ஒரு சவரன் ₹38,120க்கும் விற்கப்பட்டது. 2வது நாளாக நேற்று முன்தினமும் தங்கம் விலை சரிவை சந்தித்தது. அதாவது கிராமுக்கு 20 குறைந்து ஒரு கிராம் 4,745க்கும், சவரனுக்கு 160 குறைந்து ஒரு சவரனுக்கு 37,960க்கும் விற்கப்பட்டது.