நடிப்புக்கு முழுக்கு: பிராட் பிட் முடிவு

லாஸ்ஏஞ்சல்ஸ்: நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஓய்வு எடுக்க ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் முடிவு செய்துள்ளார். ஏஞ்செலினா ஜூலியை திருமணம் செய்த பிராட் பிட், ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஏஞ்செலினாவை விவாகரத்து செய்தார். இந்நிலையில் பிராட் பிட் நடித்துள்ள புல்லட் டிரெய்ன் ஹாலிவுட் படம், வரும் ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பிராட் பிட் பங்கேற்றார். அப்போது அவர் கூறும்போது, ‘30 வருடமாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதிகமாக உழைத்துவிட்டேன். இனி எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. வயதும் கூடிக்கொண்டே செல்கிறது. தொடர்ந்து என்னால் நடிக்க முடியும் என்றாலும் ஒரு கட்டத்துக்கு பிறகு புதியவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்குவதுதான் நல்லது. நானும் அந்த கட்டத்துக்கு இப்போது வந்திருக்கிறேன். புல்லட் டிரெய்ன் படம்தான் எனது கடைசி படமாக இருக்கும்’ என்றார்.

Related Stories: