×

அந்த பிரச்னைக்கு செல்ல விரும்பவில்லை.! திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இன்னொரு திருமணமண்டபத்தில் என்ன நடக்கிறது என தெரியும்; அந்த பிரச்சனைக்கு செல்ல விரும்பவில்லை என சென்னை திருவான்மியூர் மண்டபத்தில் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை; திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர் என கூறினார்.  

சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில்பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும்,மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர்.

இந்நிலையில் திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர் என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர்: ”மற்றொரு திருமண மண்டபத்தில் என்ன நடைபெறுகிறது என்பது தெரியும். ஆனால் அந்த பிரச்சனைக்கு நான் செல்லவில்லை. அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர்”,என்று கூறியுள்ளார்.

Tags : DMK ,Chief Minister ,MK Stalin , Do not want to go to that problem.! Those who wanted to destroy the DMK are doomed: Chief Minister MK Stalin's speech
× RELATED திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான்...