×

மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,120க்கு விற்பனை.!

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,765-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் ஒரு கிராம் ரூ.66-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,040க்கு விற்கப்பட்டது. 17ம் தேதி சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கு விற்பனையானது.

தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்நிலையில் 18ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் 38,120க்கும் விற்கப்பட்டது. 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது.

கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,775க்கும், சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் ரூ.4,765க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.38,120க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, சவரன் ரூ.38,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,765-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் ஒரு கிராம் ரூ.66-க்கு விற்கப்படுகிறது.

Tags : Gold price again crossed 38 thousand; Jewelery gold rises by Rs 160 per razor to Rs 38,120
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...