இன்று 3வது டெஸ்ட் தொடக்கம் ஆறுதல் வெற்றி ஆசையில் நியூசி.: ஒயிட்வாஷ் முடிவில் இங்கிலாந்து

லீட்ஸ்:  டெஸ்ட் தொடரை இங்கிலாந்து கைப்பற்றி விட்ட நிலையில் ஆறுதல் வெற்றி பெறும் ஆசையில் நியூசிலாந்து இன்று கடைசி டெஸ்ட் ஆட்டத்தில் களம் காணுகிறது.இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஆட்டங்களை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லார்ட்சில் நடந்த முதல் டெஸ்ட்டில்  இங்கி.,  5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. தொடர்ந்து டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட  நாட்டிங்காம் டெஸ்ட் ஆட்டத்திலும் இங்கி., 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று அசத்தியது. அதிலும் கடைசி நாளில் 50ஓவரில் 299ரன் குவித்து அதிவேக வெற்றியை சுவைத்தது. அதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் 3வது டெஸ்ட்  லீட்சில் இன்று தொடங்குகிறது.  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேப்டன் கேன் வில்லியம்சன் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது நியூசிக்கு கூடுதல் பலம். ஆனால் சமீபகாலமாக அவர் பெரிய ஸ்கோர்  அடிக்காமல் இருப்பது பலவீனமாக தொடர்கிறது. அதனால்  லாதம்,  பிளெண்டல், டாரியல் ,  நிகோலஸ்,  கான்வே,  போல்ட்,  பிரேஸ்வெல் ஆகியோர் கை கொடுத்தால் நியூசியின் ஆறுதல் வெற்றி ஆசை நிறைவேறலாம். ஆனால் அதற்கு பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான  இங்கிலாந்து விட்டுக் கொடுக்கும் வாய்ப்பு குறைவு. அந்த அணியின்  ரூட்,  போப்,  பேர்ஸ்டோ,  போக்ஸ், அலெக்ஸ்,  பிராட், மேட்டி ஆகியோர் ஆட்டத்தில் மிரட்டுகின்றனர். அதனால் நியூசியை  ஒயிட் வாஷ் செய்ய முனைப்பு காட்டும் இங்கிலாந்துக்கு பலன் கிடைக்கலாம்.

Related Stories: