ரஞ்சிக் கோப்பை பைனல் மும்பை நிதான ஆட்டம்

பெங்களூர்: மத்திய பிரதேசம்(மபி)-மும்பை அணிகள் மோதும் ரஞ்சிக் கோப்பை இறுதி ஆட்டம் பெங்களூரில் நடக்கிறது.டாஸ் வென்ற மும்பை அணி  முதலில் களமிறங்கியது.  கேப்டன் பிரித்வி ஷா,  ஜெய்ஸ்வால்  தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கினர்.  இருவரும் பொறுப்புடன் விளையாடி  முதல் விக்கெட்டுக்கு 87ரன் சேர்த்தனர்.  பிரித்வி ஷா 47ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த  ஜாபர் 26, அரை சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 78,  பர்கார் 18,  ஹர்திக்  24ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தனர். வீரர்கள் நீண்ட நேரம் களத்தில் இருந்தும் ரன் குவிக்காததால் ஸ்கோர் உயரவில்லை.

அதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  மும்பை முதல் இன்னிங்சில்  90ஓவருக்கு 5 விக்கெட்களை இழந்து 248ரன் மட்டுமே எடுத்தது.  அதிரடி வீரர் சர்பரஸ்கான்  40*,  ஷாம்ஸ் முலானி  12*ரன்னுடன் களத்தில் உள்ளனர். மபி தரப்பில் சரன்ஷ் ஜெயின், அனுபவ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும்,  குமார் கார்த்திகேயா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். மபி முழுமையாக 90ஓவர் வீசியும் வெறும் 3ரன் மட்டுமே உதிரிகளாக விட்டுத் தந்தனர்.

Related Stories: