தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 குறைந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு 80 குறைந்தது என நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,040க்கு விற்கப்பட்டது. 17ம் தேதி சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,200க்கு விற்பனையானது. தொடர்ச்சியாக 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்நிலையில் 18ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் 4,765க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் 38,120க்கும் விற்கப்பட்டது.

19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தங்க மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், அன்றைய தினம் சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது. கிராமுக்கு 10 அதிகரித்து ஒரு கிராம் 4,775க்கும், சவரனுக்கு ₹80 அதிகரித்து ஒரு சவரன் 38,200க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலை மீண்டும் குறைந்தது. கிராமுக்கு 10 குறைந்து ஒரு கிராம் 4,765க்கும், சவரனுக்கு 80 குறைந்து ஒரு சவரன் 38,120க்கும் விற்கப்பட்டது.

Related Stories: