கோவை மீன் சந்தையில் மீன்களின் விலை குறைந்தது: வெளி மாநிலங்களில் இருந்து மீன்கள் வரத்து அதிகரிப்பு

கோவை: மழை குறைந்ததாலும் கேரளா, கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பாழும்  கோவையில் மீன்கள் விலை குறைந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோயம்பதூர் லாரிபேட்டை மொத்த வியாபார மீன் மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ. 400க்கு விற்கப்பட்ட பாறை மீன் ரூ. 250க்கு விக்கப்பட்டுள்ளது சங்கர மீன் கிலோ ரூ. 250 விற்கப்பட்ட நிலையில் இந்த வரம் ரூ. 150 விற்கப்படுகிறது நெத்திலி, சாலை, வவ்வால் உள்ளிட்ட மீன்களும் கிலோ ரூ. 50 முதல் ரூ. 100 வரை குறைந்தே விற்கப்படுகின்றன.

வஞ்சிரம், வவ்வால் கிலோ ரூ. 250 குறைந்து விற்பனையாகினர், 1 கிலோ வஞ்சிரம் ரூ. 1000க்கு விற்கப்படுகிறது மீன்களின் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களை மகிழ்சியில் அழ்த்தியுள்ளது. மீன்கள் வரத்து குறைவாலும் மழை நீடித்ததால் மீன் பிடித்தல் குறைந்தாலும்  சென்ற வாரத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் மழை இல்லாததால் மீன் பிடித்தல் அதிகரித்தாழும் ஆணை மீன்கள் கேரளா, கர்நாடக, ஆந்திர உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து மீன்கள் வரத்து அதிகரிப்பாழும் விலை குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் மீன் பிடி தடை காலம் முடியும் முன்னரே வெளிமாநிலங்களில் மீன் வரத்தால்  கோயம்பதூர் லாரிபேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில் விலை குறைந்துள்ளது.   

Related Stories: