10 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரும் பணிகள்; திமுக கவுன்சிலருக்கு மக்கள் பாராட்டு

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் திமுக கவுன்சிலர் கோரிக்கையை ஏற்று 10ஆண்டுகளுக்கு பிறகு வாறுகால் பகுதியில் தூர்வாறும் பணிகள் நடைபெற்றதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டில் அண்ணா காலனி, சிவன்கோவில் நந்தவன தெரு ஆகியவை உள்ளது. இந்த பகுதியில் குடிநீர், மின்விளக்கு, வாறுகால் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக நந்தவனம் தெரு ரயில்வே பீடர் சாலையில் சுமார் 500 மீட்டர் தூரம் வாறுகால் போதிய பராமரிப்பு இன்றி மண்மேவி கிடக்கின்றது.

மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி நின்று பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. 10ஆண்டுகளாக கழிவுநீர் தேங்கி நிற்கின்றது. எனவே, உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் 28வது கவுன்சிலர் வெயில்ராஜ் வலியுறுத்தினார். கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று ஜேசிபி உதவியுடன் நேற்றுவாறுகால் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்றது. வாறுகாலில் குவிந்து கிடந்த குப்பைகள், பிளாஸ்டிக், பாலித்தீன் பைகள் அகற்றப்பட்டன. இதனால் மாநகராட்சிக்கும் மாநகராட்சி கவுன்சிலருக்கும் அந்தபகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Stories: