ஆருத்ரா கோல்ட் நிறுவனம் மீதான நிதி மோசடி புகார்: நிர்வாக இயக்குனர் வீட்டில் சோதனை மற்றும் விசாரணை.

சென்னை: ஆருத்ரா கோல்ட் நிறுவனம் மீதான நிதி மோசடி புகார்கள் தொடர்பாக மனேஜிங் டிரெக்ட்டர் பட்டவி ராமன் உள்ளிட்டோர் வீடுகளில் பொருளாதார குற்ற பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகள் கொண்ட ஆருத்ரா கோல்ட் நிறுவனம் நாகை மீதான கடன் மற்றும் முதலீடு தொழில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில்  ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.30,000 வட்டி தர படும் என விளம்பரம் செய்ய பட்டது. இந்த கவர்ச்சி விளம்பரம் பார்த்த ஏராளமான பொது மக்கள் பணம் செலுத்தி வந்தனர். ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமல் மிக அதிக வட்டி கொடுக்கபட்டது  தொடர்பாக பொருளாதார குற்ற பிரிவு போலீசார்க்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிட்ட நிறுவனத்தின் மனேஜிங் டிரெக்ட்டர் பட்டவி ராமன் இயக்குனர்கள் பாஸ்கர், மோகன் பாபு, உஷா, ஹரிஷ், செந்தில் குமார், ராஜா சேகர் மற்றும் மைக்கில் ராஜ்  ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 5  பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து சென்னை உட்பட 26 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் 48 கம்ப்யூட்டர்கல்,  6 லேப்டாப்,  44 மொபைல் போன்கள், 60 சவரம் தங்கம், 2 கார்கள்,  ரூ . 3,41,0000 பணம் பறிமுதல் செய்யபட்டது.  இயக்குனர் பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகியோர் கைது செய்யபட்டனர் இந்நிலையில் நிறுவனத்தின் மனேஜிங் டிரெக்ட்டர் பட்டவி ராமன் முகப்பேர் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் அவர்களின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தினர், மேலாளர் மைக்கில் ராஜ் வசித்த வீட்டின் உரிமையாளர் அண்ணா நகர் தினகரன் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: