சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் சாம்பியன்

பாரிஸ்:  ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த இறுதிபோட்டியில் இங்கிலாந்தின் லிவர்புல் - ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணிகள் மோதின. சமபலத்துடன் இரு அணிகளும் மோதியதால் போட்டி பரபரப்பாக இருந்தது.  இரு அணியினரும் கோல் அடிக்க தொடக்கம் முதலே தீவிரம் காட்டினர். ஆனால் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை.2வது பாதியில் ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் வினிசியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.

இதற்கு பதில் கோல் அடிக்க லிவர்புல் அணியினர் போராடினர். ஆனால் கடைசி வரை பலன்  கிடைக்கவில்லை. இதனால் ரியல்மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. 14வது முறையாக அந்த அணி பட்டம் வென்றுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Stories: