திருமானூர் அருகே வெங்கனூரில் ஜல்லிக்கட்டு; சீறிப்பாய்ந்த 641 காளைகள்.! மாடு முட்டி 29 பேர் காயம்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தில் மாரியம்மன் கோல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிகட்டு நேற்று நடைபெற்றது. இதில் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா, ஆர்டிஓ ஏழுமலை  ஆகியோர் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த 641 காளைகள் பங்கேற்றன.இதில் 300 காளையர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர. போட்டியில் பங்கேற்ற காளைகளும் காளைகளை அடக்க வந்த வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே களத்தில் இறக்கி விடப்பட்டனர்.முதலில் கோயில் காளைகள் ஓட விடப்பட்டன பின்னர் ஒவ்வொன்றாக அனுப்பப்பட்டது.

காளைகளை அடக்கிய காளையர்களுக்கும் , பிடிபடாமல் ஓடி வெற்றிபெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு கட்டில், பீரோ, மெத்தை, குத்துவிளக்கு, பாத்திரம்,கன்றுகுட்டிகள்,ரொக்க பணம், சைக்கிள் , தங்ககாசுகள் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.இதில் மாடுபிடி வீரர்கள் 10 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 10 பேர், பார்வையாளர்கள் ஒன்பது பேர் என மொத்தம் 29 பேர் காயமடைந்தனர். அனைவரும் திருமானூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனையிலும் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர்.ஜல்லிக்கட்டில் 120க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வீரர்களுக்கான முதல் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினரும் கால்நடை பரிசோதனை குழுவினரும் மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை தீயணைப்புத்துறை வீரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயாராக இருந்தனர்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்தனர். ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். தமிழகத்தில் மே மாதம் 30ம் தேதிக்குள் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த விண்ணப்பித்து நடத்தும் முடித்திடவேண்டும் என்று ஒரு விதி இருந்து வந்தது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 22 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்ற நிலையில் நேற்று நடைபெற்ற வெங்கனூர் ஜல்லிக்கட்டு 21 வது ஜல்லிக்கட்டு நடை பெற்றது. அனுமதி பெற்றோர்களில் இறுதியாக 22-வது ஜல்லிக்கட்டு தா பழூர் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: