வளவம்பட்டி கிராமத்தில் நெல் சாகுபடியில் அக்கறை காட்டும் விவசாயிகள்

கந்தர்வகோட்டை:  வளவம்பட்டி கிராமத்தில் நெல் விவசாயத்தில் விவசாயிகள் மிகவும் அக்கறை காட்டி வருகின்றனர். புதுக்கோட்டை மாவ ட்டம் கந்தர்வகோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்தில் விவசாய பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்சமயம் எள் அறுவடை, சோள பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சல், கடலை செடிகளுக்கு களைவெட்டுதல், கட்டை கரும்புக்கு மருந்து வைத்தல், போன்ற விவசாய பணிகள் தினசரி நடைபெற்று வருகிறது.

வயல்களில் சம்பா நெல் அறுவடைக்கு பிறகு நிலங்களை உழவு செய்து சேர் அடிந்து சூப்பர் பொன்னி ரக நெல் நாற்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். நெல் வயல்களில் களை பறித்து உரம் போட்டு ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள்.

அந்த விவசாயிகளிடம் பேசியபோது எங்கள் பகுதியில் நெல் நடவு என்பது எந்த காலத்திலும் நடவு செய்து அறுவடை செய்து வருவதாகவும் நெல் அறுவடை செய்ய பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் தமிழ்நாடு அரசு தொடக்க வேளா ண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கதிர் அறுவடை செய்யும் இயந்திரம் வாங்கி சிறு விவசாயிகளுக்கு வாடகை முறையில் கதிர் அறுவடை செய்து கொடுக்க வேண்டும். தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக கந்தர்வகோட்டையில் திறக்க வேண்டும். அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: