15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று தொடக்கம்: சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார்?

அகமதாபாத்: மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் வெல்வதற்காக குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்து வந்த 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறுவடைகிறது.

இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்ட போது முதல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் அணியும் நடப்பு அறிமுகமான முதல் தொடரிலேயே இறுதி போட்டிக்கு முன்னேறிய குஜராத் அணியும் இறுதி போட்டியில் மோதுவது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. =

புதிதாக அறிமுகமான குஜராத் அணி முதல் முறை கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் அணிக்கு முதன்முறையாக கோப்பையை வென்று கொடுத்த வார்னே மறைந்ததால் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் ராஜஸ்தான் அணி உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

Related Stories: