லாரியில் கடத்திய 230 கிலோ கஞ்சா அதிரடி பறிமுதல்: டிரைவர் கைது

கும்மிடிப்பூண்டி, மே 29:  கும்மிடிப்பூண்டி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவுக்கு கஞ்சா கடத்துவதாக நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்த மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர்.

அதில் லாரியின் பின்புற பகுதியில் சுமார் 230 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் டிரைவரை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பட்டுக்கோட்டையை சேர்ந்த அண்ணாதுரை(42) எனவும், இந்த லாரி ஆந்திர மாநிலம் ராஜமந்திரியில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது.

Related Stories: