வாய்தகராறில் ஒருவருக்கு கத்திகுத்து

திருவள்ளூர்: மணவாள நகரை சேர்ந்தவர் வெங்கட ரமணன்(60), நேற்று முன்தினம் ஊட்டிச் செல்வதற்காக வேனை ஏற்பாடு செய்திருந்தார். வேன் அவரது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வேனின் முன்பு ஆட்டோ நிறுத்தியிருந்தது. இதுகுறித்து வெங்கட்ரமணன் கேட்டபோது அதே பகுதியை சேர்ந்த ரகு அவரது உறவினர் சண்முகம் ஆகியோர் அவருடன் தகராறு செய்தனர். மேலும் தடுக்க வந்த வெங்கட ரமணனின் மகன் கார்த்திக்கை(47) கத்தியால் குத்திவிட்டு தப்பினர். புகாரின்படி மணவாள நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: