விதிமீறி செயல்பட்ட கல்குவாரிக்கு சீல்

திருத்தணி: திருத்தணி வட்டம் டி.சி.கண்டிகை கிராமத்தில் 2 ஹெக்டேர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலத்தில் சாதாரண கல்குவாரி நடத்த ஸ்ரீராம் என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்திருந்தார். ஆனால் அரசு விதிகளை மீறி ஆழத்தில் கற்கள் வெட்டி எடுத்ததாகவும், அனுமதி அளிக்கப்படாத இடத்திலும் சேர்த்து சுமார் 3 ஆயிரத்து 675 கனமீட்டர் அளவிற்கு விதிகளுக்கு புறம்பாக மண் எடுத்ததாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.அதன்படி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விதிமீறி செயல்பட்ட கல்குவாரிக்கு அதிரடியாக சீல் வைத்தனர்.

Related Stories: