வீட்டில் பதுக்கிய மான் கொம்புகள் துப்பாக்கி, குண்டுகள் பறிமுதல்: பிரபல ரவுடிக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே வளர்புரம், அண்ணாநகரை சேர்ந்தவர் விஜய் (26). பிரபல ரவுடி. இவர் மீது ஆந்திராவில் ஒரு கொலை, திருவள்ளூர் அருகே மப்பேட்டில் ஒரு கொலை முயற்சி உள்பட பல காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட விஜய்யை போலீசார், வலைவீசி தேடி வந்தனர். இந்தவேளையில் விஜய், ஒருவரை கொலை செய்ய உள்ளதாகவும், அதற்காக தனது வீட்டில் தங்கி திட்டமிட்டு வருவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு விஜய் வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரை கண்டதும் அவர், வீட்டின் பின்புற சுவரில் ஏறி குதித்து, காட்டு பகுதிக்கு சென்று தலைமறைவானார். இதையடுத்து போலீசார், வீட்டில் சோதனை நடத்தியபோது 6 வீச்சரிவாள்கள், 4 மான் கொம்புகள், ஒரு நாட்டு துப்பாக்கி, குண்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய விஜய்யை தேடி வருகின்றனர்.

Related Stories: