×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் போபண்ணா ஜோடி: ஸ்வியாடெக் முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்தியாவின் ரோகன் போபண்ணா - மேத்யூ மிடில்கூப் (நெதர்லாந்து) ஜோடி தகுதி பெற்றது. மூன்றாவது சுற்றில் குரோஷியாவின் நிகோலா மெக்டிச் - பேட் பாவிச் இணையுடன் நேற்று மோதிய போபண்ணா ஜோடி 6-7 (5-7), 7-6 (7-3), 7-6 (12-10) என்ற செட் கணக்கில் 2 மணி, 32 நிமிடம் போராடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

மகளிர் ஒற்ரையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-3, 7-5 என்ற நேர் செட்களில் மான்டிநீரோ வீராங்கனை டங்கா கோவினிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 1 மணி, 30 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் ரோமானியாவின் ஐரினா கேமலியா பெகு 6-1, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்சின் லியோலியா ஜீன்ஜீனை 1 மணி, 25 நிமிடங்களில் வீழ்த்தினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இத்தாலியின் யானிக் சின்னர் 6-3, 7-6 (8-6), 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்டை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ரஷ்யாவின் ஆந்த்ரே ருப்லேவும் 4வது சுற்றில் நுழைந்துள்ளார்.

Tags : Bopanna ,French Open ,SwiTech , French Open tennis, Bopanna pair up in quarterfinals, SwiTech advance
× RELATED போபண்ணாவுக்கு பாராட்டு விழா