அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கு இதர செலவினம் அதிகரிப்பு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 21ம் தேதி 2022-23ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது, முதல்வர் அறிவித்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன் சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவின தொகையை ரூ.30லிருந்து ரூ.50ஆக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: