அரசு பள்ளிகளில் ஜூன் 13ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: அரசு பள்ளிகளில் வரும் ஜூன் 13ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் இதுவரை மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை. இந்நிலையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வரும் ஜூன் 13ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மே 5ம் தேதி 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கப்பட்டு பொதுத்தேர்வு முடிவடைந்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திங்களன்று முடிவடைய இருக்கிறது. இந்த சூழலில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் ஜூன் 13ம் தேதியே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: