இக்கட்டான நேரத்தில் உதவியதற்காக இந்தியாவுக்கு ரணில் பாராட்டு

கொழும்பு: இலங்கையின் இக்கட்டான நேரத்தில் இந்தியா உதவியதற்கு நன்றி தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரம சிங்கே பதவிட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார மற்றும் அரசியல்  நெருக்கடிகளுக்கு மத்தியில் மூத்த அரசியல்வாதிகள், பிரதமர் ரணில்  விக்ரமசிங்கேவை ேநற்று சந்தித்தனர். அப்போது அரசியலமைப்பு திருத்தங்கள்  குறித்து கலந்துரையாடினர். அதிபருக்கு வழங்கப்படும் அதிகபட்ச அதிகாரங்களை  குறைக்கும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்தை விரைவில் நிறைவேற்றுவது  ெதாடர்பாக ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட பதிவில், ‘இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொலைபேசியில் பேசினேன். இக்கட்டான நேரத்தில் இந்தியா வழங்கிய உதவியை எங்களுடைய நாட்டு மக்கள் சார்பில் பாராட்டுகிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதை எதிர்நோக்கி உள்ளேன். குவாட் மாநாட்டில் இலங்கைக்கு உதவுவது தொடர்பான முன்மொழிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: