×

ஆசியாவில் அமைதி நிலவ ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்ப பெற வேண்டும்: பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் பேச்சு

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தெரிவித்துள்ளார். ஆசியாவில் அமைதி பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் எனில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் கூறியுள்ளார். பாகிஸ்தானின் புதிய பிரதமராக கடந்த மாதம் பொறுப்பேற்ற ஷெபாஸ் ஷெரிஃப், முதன் முறையாக அந்நாட்டு மக்‍களுக்‍கு உரையாற்றினார். தொலைக்‍காட்சி மூலம் உரையாற்றிய அவர், பாகிஸ்தானின் பொருளாதாரம் பாதிக்‍கப்பட்டதற்கு முந்தைய இம்ரான்கான் அரசே காரணம் என குற்றம்சாட்டினார்.

பாகிஸ்தானில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்‍கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என தெரிவித்தார். ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 ஐ ரத்து செய்தது சட்ட விரோதமானது என கூறினார். ஆசியாவில் அமைதி நிலவ, ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டதை இந்தியா திரும்ப பெற வேண்டும் என்றும், இந்தியா எடுத்த ஒருதலைப்பட்ச மற்றும் சட்டவிரோத முடிவை ரத்து செய்வது அந்நாட்டு அரசின் பொறுப்பு என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் சரிப் தெரிவித்தார்.

Tags : India ,Jammu and Kashmir ,Asia ,Pak ,Shebaz Sharif , Jammu and Kashmir, Special Status, India, Pakistan. Prime Minister Shebaz Sharif
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!