வேங்கூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டி 19 பேர் காயம்

திருவெறும்பூர் : திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 19 பேர் காயம் அடைந்தனர்.திருவெறும்பூர் அருகே வேங்கூர் சாம்பவமூர்த்தி கோயில் திடலில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவை தாசில்தார் ரமேஷ் துவக்கி வைத்தார். திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் சுற்று பகுதி ஊர்களில் இருந்து 746 மாடுகள், 245 வீரர்கள் கலந்துகொண்டனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் முறையாக ஜல்லிக்கட்டு மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டது. சிறந்த காளைகளுக்கும் வீரர்களுக்கும் பரிசு பொருட்கள், ரொக்க பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலாஜி தலைமையிலான குழுவினர் காயம்பட்டவர்களுக்கு முதல்கட்ட சிகிச்சையும், படுகாயமடைந்தவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கால்நடை மருத்துவ இணை இயக்குனர் எஸ்தர் ஷீலா தலைமையில் மாடுகள் பரிசோதிக்கப்பட்டது. டிஎஸ்பி (பொ) ஜெயசீலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Related Stories: