ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 2500 கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி

* கலெக்டர் தொடங்கி வைத்தார் * 3 மணி நேரத்தில் தூய்மை செய்து சாதனை

சோளிங்கர் : ராணிப்பேட்டை மாவட்டத்தில் உலக சாதனை முயற்சியாக 2500 கிலோமீட்டர் தூர பரப்பளவில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை மூன்று மணிநேரத்துக்குள் அகற்றும் நிகழ்ச்சியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தொடங்கி வைத்தார். அதன்படி சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை நகராட்சி தலைவர் தமிழ்செல்வி அசோகன், நகராட்சி ஆணையர் பரந்தாமன் தொடங்கி வைத்தனர். பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியில் கவுன்சிலர்கள், தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு 9 டன் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அகற்றினர்.

அதேபோல் சோளிங்கர் ஒன்றியத்தில் பாண்டியநல்லூர், கரிக்கல், ஆயல், நந்திமங்கலம், போளிப்பாக்கம் உள்ளிட்ட  40 ஊராட்சிகளில்  பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணிகளை ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், துணை தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட குழு துணைத்தலைவர் நாகராஜூ, பிடிஓக்கள் சுரேஷ் சவுந்தரராஜன், தனசேகர் ஆகியோர் தொடங்கி  வைத்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

இதில்  ஒன்றிய அலுவலக மேலாளர் பிரபாகரன், பாண்டிய நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி ரகுராம் ராஜூ, ஆயல் ஆனந்தன், நந்திமங்கலம் கவிதா நரசிம்மன், மகளிர் திட்ட வட்டார இயக்க மேலாளர் அலமேலு வட்டார ஒருங்கிணைப்பாளர், பாஞ்சாலை மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு 10 டன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினார்கள்.

திமிரி, கலவை சுற்றுப் பகுதிகள்: கலவை அடுத்த திமிரி பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு மனோகரன், பேரூராட்சி மன்றத் தலைவர் மாலா இளஞ்செழியன், துணைத்தலைவர் கவுரி தாமோதரன் ஆகியோர் தலைமையிலும் கலவை தாலுகாவிற்கு உட்பட்ட திமிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய, ஒன்றியக்குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், ஆகியோர் தலைமையிலும் சுமார் 3 மணி நேரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை கிராமப் பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள், துணைத் தலைவர்கள் , உறுப்பினர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள், மகளிர் குழுவினர், டெங்கு பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், பேரூராட்சி, ஊரக உள்ளாட்சி துறை ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள், மகளிர் குழுவினர், டெங்கு பணியாளர்கள், பரப்புரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு 11,307 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.

நெமிலி: நெமிலி தாலுகாவுக்கு உட்பட்ட நெமிலி பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட 3 டவுன் பேரூராட்சிகளிலும், நெமிலி காவேரிப்பாக்கம் உள்ளிட்ட 2 ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்ட 76 கிராமங்களில் நேற்று பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் கேன்கள் உள்ளிட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் லாரிகள் மூலம் மூட்டை, மூட்டையாக கொண்டுவந்து அதனை தரம் பிரித்து எடை போடும் பணிகளை அனைத்துத்துறை ஊழியர்கள் செய்தனர்.

இந்தப் பணிகளை இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மேலாளர்கள் யஷ்வந்த் சாய், வெங்கடேஸ்வரன் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நெமிலி தாசில்தார் ரவி, மண்டல துணை தாசில்தார் மகாலட்சுமி, நெமிலி பிடிஓக்கள் வேதமுத்து, சிவராமன், காவேரிப்பாக்கம் பிடிஓக்கள், அன்பரசன், பாலாஜி, செயல் அலுவலர்கள், சரவணன், குமார், பேரூராட்சித் தலைவர்கள் ரேணுகாதேவி சரவணன், கவிதா சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், கவுன்சிலர்கள், துப்புரவு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குப்பை அகற்றும் பணி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

கலவை பேரூராட்சியில் 3 மணி நேரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணி நேற்று செயல் அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி மன்றத் தலைவர் கலா சதீஸ் முன்னிலை வகித்தார். பேரூராட்சியில் கல்லூரி மாணவ- மாணவிகள், மகளிர் குழுவினர், டெங்கு பணியாளர்கள், பராமரிப்பாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் தூய்மைப் பணியாளர்கள் உட்பட 400 பேர் கொண்ட குழுவினர் 15 வார்டு முழுவதும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இப்பணியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ஆய்வு செய்தார். இதில் கேர் காட்சியில் மட்டும் நேற்று 3 மணி நேரத்திற்குள் பிளாஸ்டிக் குப்பைகளை 2,250 கிலோ அகற்றினர். இந்நிகழ்ச்சிக்கு இளநிலை உதவியாளர் கவுஸ், துணைத்தலைவர் நீலாவதி தண்டபாணி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மேத்தாஜிபிரபு, சாபிஹசானவுல்லா, சோட்டபா, புண்ணியகோட்டி மற்றும் பேரூராட்சி உதவி பொறியாளர் பாலு, தூய்மை பணி மேற்பார்வையாளர் அரங்கநாதன், குடிநீர் பராமரிப்பாளர் சீனிவாசன், தூய்மை பணியாளர்கள், மகளிர் குழுவினர், டெங்கு பணியாளர்கள், பரப்புரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: